சென்னையில் பத்திரிகையாளர்கள் கோட்டையை நோக்கி மாபெரும் மறியல் போராட்டம்! பத்திரிகையாளர்கள் கைது !
தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோட்டையை மாபெரும் மறியல் போராட்டம் மாநிலத் தலைவர் இளசை கணேசன், மாநில செயலாளர் கா குரு தலைமையில், மற்றும இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் திரு.லெனின் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஜெகதீசன், தமிழன் வடிவேல், A. பால்ராஜ், ஆ. வீ. கன்னையா, வில்லியம்ஸ் ஜேவியர் , நாகராஜன், அயன்புரம் பாபு,
N. k. முத்தையா, அன்பரசன், வீரமுத்து, சிங்க தமிழச்சி, ரபீக், செல்வம், முன்னிலையில் சென்னை தாராப்பூர் டவர் அருகே கோட்டையை நோக்கி மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சங்கங்கள் என 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி வி. வி பிள்ளை தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர்.
கருத்துகள் இல்லை