உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருப்பாகுட்டை அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் வேல்முருகன், 1வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (மு.கூ.பொ) சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன்குமார், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் குழுவினர் மற்றும் பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை