செய்தியாளர் எனக் கூறி அரசு அதிகாரிகள் மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்தும் நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் திமிரி பூண்டு வியாபாரி!
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை சேர்ந்தவர் பூண்டு வியாபாரி பிரபாகரன் மணி. இவர் எங்கெங்கு வாரச்சந்தை நடக்கிறதோ அங்கெல்லாம் கடை போட்டு பூண்டுr விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னை ஒரு மாதம் இருமுறை வெளியாகும் இதழின் மாவட்ட செய்தியாளர் என்று கூறிக்கொண்டு ஒரு போலியான அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளார் .தன்னை ஒரு செய்தியாளர் என்று சொல்லிக் கொண்டு செய்தி வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியும் இவர் அரசு அதிகாரிகள், காட்டன் சூதாட்டம் நடத்தும் நபர்கள், விபச்சார விடுதி நடத்தும் நபர்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர், சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு சென்று பணம் கேட்டு மிரட்டி வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த நபர். இவர் ஒரு அடி அடித்தால் கூட தாங்க இயலாத நிலையில் இருக்கும் இவரை பார்த்து பரிதாபப்பட்ட அரசு அதிகாரிகள் முதல் காட்டன் சூதாட்டம் நடத்தும் நபர்கள் வரை இவருக்கு ரூபாய் ஆயிரம், ரூ. 2000 என்று வாரிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக இவர் ராணிப்பேட்டை மாவட்டம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து "பிரஸ்" என்று கூறிக்கொண்டு வசூல் வேட்டை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த பூண்டு வியாபாரி. இந்த பூண்டு வியாபாரி வசூல் செய்வதை பார்த்து பரவசமடைந்த இவரது நண்பர் ஒருவரும் திமிரியில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் ஒருவரிடம் ரூபாய் 5000 பெற்றுக்கொண்டு போலி அடையாள அட்டையை அவருக்கும் போட்டு கொடுத்துள்ளார் இந்த ஜெகஜால கில்லாடி பூண்டு வியாபாரி பிரபாகரன் மணி. இவர் வசூல் வேட்டை முடிந்த பிறகு மண்ணுளிப் பாம்பை பிடிப்பது, இதை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு கொண்டு சென்று அதை விற்பனை செய்வது என்று ஒரு தொழிலையும் இதன் இணைப்பு தொழிலாக சேர்த்து கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வேலையே செய்யாமல் பணம் மட்டுமே வசூல் செய்யும் இது போன்ற மோசடி பேர்வழிகளை இதுநாள் வரை எந்த அதிகாரியும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அரசு அதிகாரிகள் முதல் டாஸ்மாக் பார்கள் மற்றும் மது கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாமூல் எதற்கு கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளது. செய்தியாளர் என்று சொன்னவுடன் பணத்தை அள்ளிக் கொடுக்கும் நிலை நிலவுகிறது. ஏனென்றால் காவல் துறையிடம் கூட தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் செய்தியாளர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. எப்படியாவது சிக்கிக் கொள்வோம்.பப்ப் அத்துடன் சமுதாயத்தில் தனக்கு உள்ள பெயர் கெட்டுவிடும் என்ற பயத்தில் நல்லவர்கள் முதல் கெட்டவர்கள் வரை பணத்தை வாரி இறைக்கும் நிலை நிலவுகிறது. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த பூண்டு வியாபாரி வசூல் வேட்டையில் இறங்கிவிட்டார் என்பதுதான் நிதர்சன உண்மை. இவர் வசூல் செய்ததோடு மட்டுமின்றி இவர் பரோட்டா மாஸ்டர் ஒருவரை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டு வலம் வருகிறார் என்பதும் கூடுதல் தகவல் என்றே சொல்லலாம். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள இது போன்ற போலி அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டையை மற்றவர்களுக்கு போட்டுக் கொடுத்து வலம் வரும் இதுபோன்ற போலி செய்தியாளர் பிரபாகரன் மணி போன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது உழைக்கும் செய்தியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி போன்றோர் இந்த பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சட்டத்தின் முன் சிக்கி சின்னாபின்னமாவது எப்போது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவர் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே உழைக்கும் செய்தியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை