வாலாஜாபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் கழுகு பார்வையில் 1500 பால் குடங்களை தலையில் சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 45-ஆம் ஆண்டு ஆடிமாத நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு 1,500 பால்குடம் எடுக்கும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது..
முன்னதாக ஊரில் இருக்கும் பெண்கள், ஆண்கள், வயதான முதியவர்கள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே குளித்து முடித்து விட்டு வன்னிவேடு பாலாற்றங்கரையில் இருந்து பல்வேறு புஷ்பா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான பூ கரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் பால் குடத்தை தலையில் சுமந்து கொண்டு முக்கிய சாலையின் வழியாக கழுகு பார்வையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை திருவிழா கோலபோல ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் கருவறையில் உள்ள படவேட்டமனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் பால் அபிஷேகம் செய்து மஹா தீபாரதனை காண்பித்தவாறு அம்மனை மனமுருகி ஓம்சக்தி ஒம்சக்தி என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தியவாறு வழிப்பட்டு சென்றனர்.
மேலும் நடைபெற்ற ஆடிமாத பால்குட திருவிழாவில் வாலாஜாபேட்டை மட்டுமின்றி ராணிப்பேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வேலூர், சோளிங்கர் என பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444
கருத்துகள் இல்லை