• சற்று முன்

    வேலூர் கொணவட்டத்தில் வார்டு எண் 31ல் மேயர் ஆய்வு!


    வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கொணவட்டத்தில் வார்டு எண் 31ல் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த வார்டு எண் 31ல் கொணவட்டம் குமரன் தெருவில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடத்தில் புதியதாக கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் அரசு உடன் இருந்தார். அவர்களுடன் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடன் சென்றனர். இந்த ஆய்வு சுமார் அரை மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்றும் மேயர் கட்டடப் பணியில் இருந்த பொறியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

    செய்தியாளர் : வாசுதேவன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad