வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு பண அலங்காரம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நெல்லிசெட்டி தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில் 11-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 5 வெள்ளிக்கிழமைகளில் பணம், பழம், காய், வெற்றிலை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்வார்கள்..
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஐந்தாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருவறை முழுவதும் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அம்மனுக்கு சிறப்பு பணம் அலங்காரம் செய்து வாலாஜாபேட்டை மட்டுமின்றி வேலுர், ராணிப்பேட்டை, ஆற்காடு,கலவை,காவேரிப்பாக்கம், ஒச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்..
செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ்
கருத்துகள் இல்லை