மத்திய தொழில் பாதுகாப்பு படை 49 பயிற்சி நிறைவு விழா
அரக்கோணம் அடுத்து தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி பள்ளி உள்ளது இதில் 49 ஆவது பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது இதில் 739 வீரர்கள் இப்பயிற்சி நிறைவு செய்தனர் இதில் 523 பெண் காவலர்கள் மற்றும் 216 ஆண்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள பாராளுமன்றம் நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழிற் பாதுகாப்பு படை சென்னைப் பிரிவில் தலைமை அதிகாரி ஸ்ரீ எஸ் ஆர் சரவணன் கலந்துகொண்டார்
முன்னதாக சீருடை உடன் மினுக்காக நின்று கொண்டிருந்த வீரர்களை திறந்த ஜீப் மூலம் பார்வையிட்டார் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் நின்று கொண்டிருக்க வீரர்கள் அணிநியாக வீர நடையுடன் கொடுத்த அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு உரையாற்றினார் அப்பொழுது தற்பொழுது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாராளுமன்றம் விமான தளம் நீதிமன்றங்களில் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்
நவீன எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிப்பது அதை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல்வேறு பயிற்சிகளை பெற்றிருப்பதால் சிறப்புடன் செயல்படுவதாகவும் இன்றும் இந்த பயிற்சியில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயிற்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெண்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்
இந்நிகழ்ச்சியை அரக்கோணம்மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியின் முதல்வர் Dig யாமினி ப்ரியா தலைமை ஏற்று சிறப்பு விருந்தினர் வரவேற்றார்
நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஐ என் எஸ் ராஜாளி கடற்படை அதிகாரிகள் மற்றும் பயிற்சி நிறைவு செய்த வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ்
கருத்துகள் இல்லை