முரசொலி மாறன் பிறந்த நாள் விழா!
வேலூர் மாநகர தி.மு.க. அலுவலகத்தில் திமுக தலைவர் கலைஞரின் மனசாட்சி மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ வும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் மாநில அமைப்பு செயலாளர் மருத்துவர் வி.எஸ்.விஜய், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணிகள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ,கழகத் தோழர்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் :வாசுதேவன்
கருத்துகள் இல்லை