• சற்று முன்

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூர் மண்டல அமைப்புக் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி:

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூர் மண்டல் அமைப்பு கூட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி வேலூரில் காந்திநகர் மேற்கு 17, சிந்து கார்டன் பகுதியில் மனித நேயக்கூடத்தில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இளசை கணேசன் தலைமையில் நடைபெற்றது. 


    கூட்டமைப்பில் மாநில பொதுச் செயலாளர் கா. குரு,, பொருளாளர் ஆ.வீ.கன்னையா, துணைத் தலைவர்கள் டாக்டர் K. ஜெகதீசன், தமிழன் வடிவேலு , இணைச் செயலாளர் என். கே. முத்தையா, ஒருங்கிணைப்பாளர்கள் சிங்கத் தமிழச்சி,பிரதாப் திருப்பத்தூர் வெங்கடேசன், தமிழ்நாடு செய்தி துறை யூனியன் ஆர் கவிராஜன் தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


    வேலூர் மாவட்டத்தில் இருந்து  வாசுதேவன், பி. எஸ். சுப்பிரமணியன், கார்த்திக், செந்தில். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வெங்கடேசன்,, கோ.வி. சரவணன் அருண்குமார், புவனேஸ்வரன் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ஆர் ஜே சுரேஷ் பன்னீர் செல்வம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து முருகானந்தம், ஜி கார்த்திக், தீனா, மல்லி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைப்பாளர் விருதை காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பத்திரிக்கையாளர்களும், திருவண்ணாமலை ஜவ்வாது மலை வாழ் மக்கள் பிரதிநிதிகளும். குடியாத்தம் பகுதி மாற்றுத்திறனாளிகளும் தொழு நோயாளிகளும் கலந்துரையாடலில் பங்கேற்று தங்களின் அடிப்படை ப் பிரச்சனைகளை எடுத்துக் கூறினர். 

    இவர்களது அடிப்படையான பிரச்சனைகளை அரசுக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதுடன் முடிந்த உதவிகளை செய்வதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர். மலைவாழ் மக்களுக்கு சோலார் விளக்கு தயாரிப்பு பயிற்சி அளிப்பது சில நிறுவனங்கள் மூலம் உதவி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    தமிழ்நாடுபத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூர் மண்டல அமைப்பின் அடுத்த நிகழ்வை ஜவ்வாது மலையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    தோழமையுள்ள,  இளசை கணேசன்,                                      கா. குரு 

    மாநிலத் தலைவர்                                                                 மாநில செயலாளர் 

    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 

    செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...                          



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad