• சற்று முன்

    "'சென்னையை சேர்ந்த 1008 மாற்றுத்திறனாளி குழந்தைகள், திருமலை வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ரெயிலில் ஆன்மீக பயணம்-அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!!



    திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனைக் குழுவும், சென்னை ரோட்டரி சங்கமும் இணைந்து 1008 கண்பார்வையற்ற , வாய்பேசமுடியாத, மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்நு திருமலைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. 

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு களந்து கொண்டு குழந்தைகளின் ஆன்மீக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்  திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை முன்னாள் தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி, சென்னை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தனி ரெயிலில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் தனி கேட்டரிங் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு காலை ,இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆன்மீகப் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலையில் அமைந்துள்ள அன்னதானக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    கண் பார்வையற்ற, வாய்பேச முடியாத, மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற குழந்தைகளை திருமலை வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்த திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழுவையும், சென்னை ரோட்டரி சங்க நிர்வாகிகளையும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர

    செய்தியாளர் ஆர் ஜே. சுரேஷ்

     ஸஹீஹ்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad