தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது பணியிட மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழக காவல் துறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்.
சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்.
நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், வட சென்னை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம்.
ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம். மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்.
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம்.
ரயில்வே டிஐஜியாக அபிஷேக் தீட்ஷித் நியமனம். ராமநாதபுரம் சரக டிஐஜியாக அபினவ் குமார் நியமனம். சாமூண்டீஸ்வரி ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
கருத்துகள் இல்லை