• சற்று முன்

    வேலூர் தொரப்பாடியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை பன்முக மருத்துவ அலுவலகம் திறப்பு விழா!


    வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா,  தொரப்பாடியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை பன்முக மருத்துமனை கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், இணை இயக்குநர், கால்நடை பராமரிப்பு துறை (பொ) மரு. கோபி கிருஷ்ணன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) மரு.அந்துவன், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) படவேட்டான் 4 வது மண்டலக்குழுத் தலைவர், கால்நடை மருத்துவமனை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad