• சற்று முன்

    மனிதநேயம் கொண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் - சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

    கடந்த வெள்ளிக்கிழமை 16ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் வண்டலூர் கிளாம்பாக்கம் பாலத்தில் நெருக்கடியான போக்குவரத்து சூழலில் ஒரு நபர் விபத்துக்கு  உள்ளாகி மோசமான சூழ்நிலையில் விழுந்து கிடந்த அந்த நேரத்தில் அந்த பகுதியில் ஒரு சிலர் சுற்றி நிற்கின்ற வேளையிலே அந்த இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல் துறை மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி அவர்கள் அவர்களோடு வந்த மற்ற காவலர்கள் அந்த நபரை காப்பாற்றி உடனடியாக 108 அவசர சிகிச்சை  வரச் செய்து நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட முகம் வாடாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற சொல்லுக்கு மனித நேயம் என்ற சொல்லுக்கும் காவலர்கள் மக்களின் நண்பர்கள் என்ற சொல்லுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய லோகேஷ் காந்தி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் அந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் சாலையில் சுய நினைவில்லாமல் இரத்தம் வடிந்து விழுந்து கிடந்த நபரை யாரும் தொடுவதற்கு உதவி செய்வதற்கு அச்சப்படும் நேரத்தில் ஓலா கார் டிரைவர் ஒருவர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் அவர்களும் ரத்தம் வடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த நபரை தூக்கி அவசர சிகிச்சை உறுதியில் ஏற்றி அனுப்பி வைக்க உதவி செய்தார்கள்..  கூடுவாஞ்சேரி காவல் நிலையம் மறைமலைநகர் காவல் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி மற்றும் போக்குவரத்துக் காவல் துறையைச் சார்ந்த காவலர்கள் மற்றும் ஓலா டிரைவர் மனிதநேயமிக்க இந்த மனிதர்களை வாழ்த்துகிறோம்.... சமூக நீதிப் பேரவை
    மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தலைவர் முனைவர் பொன் பாலசுப்ரமணியன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad