• சற்று முன்

    கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க வழியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில்முற்றுகை ஆர்ப்பாட்டம்


    கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் பகுதியில் முறையாக குடிநீர் இணைப்பு வழங்க வழியுறுத்தி  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளவிபட்டி பஞ்சாயத்து கெச்சிலாபுரம் கிராமத்தில் ஜேஜேஎம் திட்டத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறையாக வழங்கிட கோரியும், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி புதிதாக அமைத்து தர வேண்டும் எனக் கோரியும், அனைத்து தெருக்களிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறியும், ஆழ்துளை கிணறு அமைக்க 175000 ரூபாய் முறையாக செலவலிக்கவில்லை எனத் தெரிவித்தும், அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் யாரும் வராத காரணத்தினால் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர் உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர் இந்த சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர் : சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad