கொடுக்கந்தாங்கல் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் 29 ஆம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிழாவில் கிடா விருந்து!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கொடுக்கந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் 29ம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு 2ஆம் ஆண்டு கிடா விருந்து நடந்தது. ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு ஸ்ரீ கங்கையம்மன் சிறப்பு ஊர்வலம் நண்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்தலம் பிற்பகல பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானமும் நடந்தது இதை தொடர்ந்து பக்தர்களுக்கு கிடா விருந்து மாலை 6:00 மணி வரை இடைவிடாது விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பால்குட ஊர்வலமும், 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், முற்பகல் 11 மணிக்கு பொங்கல் வைத்தலும் நடந்தது. இதை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சக்தி கரக ஊர்வலமும், மாலை 6 மணிக்கு தீமிதித்தல் வைபவமும், மாலை 6:30 மணிக்கு அம்மன் தாலாட்டும், இரவு 7 மணிக்கு வாண வேடிக்கைகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஜோலார்பேட்டை நாட்டியாலயாவின் ஆடல் பாடல் இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10:30 மணிக்கு ஆரணி சரவணா நாடக மன்றத்தினரால் நாடகம் நடைபெற்றது . இந்தா கிடா விருந்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஹாலக்ஷ்மி முரளி, கோயில் தர்மகர்த்தா முரளி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் செய்திருந்தனர். இந்த கிடா விருந்தில் கும்பம் படையலும் நடந்தது குறிப்பிடத்தக்கது. கிடா விருந்து அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டு இந்த அசைவ உணவை உண்டு மகிழ்ந்தனர்.
செய்தியாளர் :வாசுதேவன்
கருத்துகள் இல்லை