ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம், தேமுதிக என காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம், வாக்காளர்களே எஜமானர்கள் என்றும், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தேமுதிக என காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..
அம்மன் ஆலயங்களில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி ஏராளமான சாமி தரிசனம் மேற்கொள்ள வந்தனர். இது மட்டுமில்லாமல் இன்று வரலட்சுமி விரதம் மேற்கொள்வதால் ஏராளமான பெண்கள் அம்மணி தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அவ்வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் நடிகர் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார். அவருக்கு சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் அர்ச்சனையுடன் அம்மனை வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் , அனைத்துக் கட்சிகளும் தற்போது பொதுக்குழு கூட்டி வரும் நிலையில் ஏற்கனவே தேமுதிக அலுவலகத்தில் நாள்தோறும் 2026 காண சட்டமன்ற தேர்தல் கூட்டங்களை நடத்தி வருகிறது. சுதந்திர தின விழாவில் ராஜ்பவனின் தேமுதிக சார்பில் கலந்து கொண்டு அனைத்துக் கட்சித் தலைவர்களின் சந்தித்தோம்.
ஜாதி , மதத்திற்கு அப்பாற்பட்டது தேமுதிக எனவும், ஓட்டு போட உரிமை உள்ள அனைவரும் முதல்வராக உரிமை உள்ளது. மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் தான் இறுதி தீர்ப்பு தர உள்ளார்கள். ஜாதி மதத்திற்கு இங்கு வேலை இல்லை என தெரிவித்தார். திருக்கோயில் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் க்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை