ஆடி கடைசி வெள்ளியில் வரலட்சுமி பூஜை பெண்கள் நோன்பிருந்து சிறுமிகளுக்கு பாதபூஜை செய்து வழிபாடு
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் 'வரலட்சுமி பூஜை' செய்து வழிபட்டனர். ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் அம்பாள் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இம்மாத வெள்ளிக் கிழமைகளில், அம்பாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆடி கடைசி வெள்ளி மகாலட்சுமிக்கு உரிய 'வரலட்சுமி நோன்பாகக்' கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டனர். வீட்டில் கும்பத்தில் மகாலட்சுமியை எழுந்தருளச் செய்து, அலங்காரங்கள் செய்து வழிபாடு செய்தனர். இனிப்பு பட்சணங்கள், அவல், பாயசம், சர்க்கரை பொங்கல், பழங்கள் படைத்து பூஜைகள் செய்தனர்.
மேலும், தங்கள் வீட்டு சிறுமிகளை மகாலட்சுமியாகப் பாவித்து அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கி வழிபாடு செய்தனர். வரலட்சுமி பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாக பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர்.
செய்தியாளர் :காளமேகம்
கருத்துகள் இல்லை