• சற்று முன்

    வேலூர் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!


    கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை பட்டதாரி பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு வேலூர் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்துவிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் நர்மதா தலைமை வகித்தார்.

    இந்திய மருத்துவ சங்கத்தின் மற்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    செய்தியாளர் :வாசுதேவன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad