வளர் இளம்பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு நடைப்பயண பிரச்சாரம்
வளர் இளம்பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு நடைப்பயண பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது
மாதவிடாய் தீட்டு இல்லை என 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் விழிப்புணர்வு பேரணி கலந்து கொண்டனர்
வளர் இளம்பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று நடைபெற்றது.
இப்பேரணி பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி சக்தி காவியா, மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு பூங்கா பகுதியில் இருந்து துவங்கி, குரு கோவில் வழியாக , கிருஷ்ணன் தெரு வரை முக்கிய நகர் பகுதிகளில் பேரணி நடைபெற்றது.
இதில் 100 க்கும் மேற்பட்ட வளர் இளம் பெண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வின் முக்கிய நோக்கம், மாதவிடாய் காலங்களில் வளர் இளம் பெண்களின் சுகாதாரம் மற்றும் சுத்தம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தேவையான சுகாதார உபகரணங்கள் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை போன்றவை உறுதிபடுத்த பேரணி நடைபெற்றது.
மேலும், பள்ளிகளில் இலவச நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும், பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்த வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முக்கிய கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் வளர் இளம் பெண்களின் பாலியல் இனப்பெருக்க சுகாதார உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.
அனைத்து வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் பள்ளிக்கூடங்கள் வாயிலாகவோ ரேஷன் கடைகள் மூலமாகவோ அரசு வினியோகிக்க வேண்டும்.
பொதுக்கழிப்பறைகள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
பாடப் புத்தகங்களில் பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய பாடங்களை இணைக்க வேண்டும். மாதவிடாய் பற்றிய மூடநம்பிக்கைகளை அகற்ற, பாடத்திட்டத்தில் மாதவிடாய் சுகாதாரம் பாடமாக வரவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இளம் பெண்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை