காட்பாடி காந்திநகரில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறு பாலப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி காந்திநகர் 8 வது கிழக்கு மெயின் ரோட்டில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறு பாலப்பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம், துணை காவல் கண்காணிப்பாளர், தேசிய நெடுஞ்சாலை செயற்பொறியாளர் ஜெயகுமார், போக்குவரத்து துறை துணை மேலாளர் (வணிகம்) சீனிவாசன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை