வேலூர் மாநகராட்சி கொனவட்டம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி மண்டலம் 4, வார்டு 32, கொணவட்டம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம், துணை காவல் கண்காணிப்பாளர், தேசிய நெடுஞ்சாலை செயற்பொறியாளர் ஜெயகுமார், போக்குவரத்து துறை துணை மேலாளர் (வணிகம்) சீனிவாசன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்
reporter : vasudevan
கருத்துகள் இல்லை