• சற்று முன்

    உத்திரமேரூர் அருகே ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பநல்லூர் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தில் கிராம மக்கள் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு இன்று கும்பாபிஷேக விழா நடத்தினர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், திருவாராதனம்,வாஸ்து ஹோமம், விஸ்வரூபம்,கோ பூஜை, அக்னி ப்ரணயனம், பூரணாஹூதி, உள்ளிட்ட யாக கால பூஜைகள் ஆலயத்தில் நடந்தது. அதைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து ஆதிகேசவ பெருமாள் கோவில் விமான கோபுரத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.

    பின்னர், பக்தர்கள் மேல் புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.
    இந்த கும்பாபிஷேக விழாவில் அம்மையப்ப நல்லூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    செய்தியாளர் : தினேஷ் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad