நள்ளிரவில் தூங்கிய பெண்ணிடம் நகை செல்போனை ஆட்டைய போட்ட வாலிபர் கைது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை தியாகராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் .இவரது மனைவி பெயர் அஞ்சுகம் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து கேட்டை அடைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு இரண்டு மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க ஆசாமி முன்பக்க கேட்டை மெதுவாக திறந்து வீட்டுக்குள் உள்ளே சென்ற நபர் வீட்டிலிருந்த செல்போனை கையில் எடுத்துக்கொண்டு அங்கு படுத்திருந்த அஞ்சுகம் கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையை அத்துக்கொண்டு ஓட முயற்சித்தபோது விழித்துக் கொண்ட அஞ்சுகம் தனது கழுத்தில் இருந்த செயினை பிடித்துக் கொண்டார்.
இதனால் பாதி நகை மட்டும் கொள்ளையன் கையில் சிக்கியது. அதோட தப்பி
ஓடிய மர்ம ஆசாமியை ஆனந்தன் மற்றும் அவரது மகன்கள் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர்.கொள்ளையன் பசுமலை பி ஆர் சி செட் அருகே உள்ள தெருவில் சென்று மாயமாக மறைந்தான்.இதில் பின் தொடர்ந்து ஓடிய ஆனந்தன் கீழே விழுந்ததால் அவரது இடது கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் ஆனந்தன் தகவல் தெரிவித்தார்.
அதன் பின்பு அங்கு வந்த போலீசார் மர்ம ஆசாமியின் அடையாளத்தை ஆனந்தனிடம் கேட்டுப் பெற்று கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட செல்போன் மற்றும் பாதி அறுந்த செயின் மதிப்பு சுமார் 1 லட்ச ரூபாயகும்.நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிய பெண்ணிடம் 1 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்றமர்ம நபர் குறித்து பசுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் குற்றப்பிரிவு எஸ்ஐ .சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
திருப்பரங்குன்றம் ருத்ரபதி ஆய்வாளர் வேதவள்ளி மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள டி டிவி காட்சிகள் மற்றும் செல்போன் தொடர்பு இவற்றை கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர் |
செல்போன் டவர் சிக்னல் அலைவரிசையை வைத்து கொள்ளையனை தேடி வந்த நிலையில் கொள்ளையன் வெளியூரில் இருந்து மதுரை வந்தபோது அனுப்பி போலீசார் மடங்கு பிடித்தனர் கைது செய்யப்பட்ட குமார் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது விசாரணையில் பசுமலை புதிய அம்பஅம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் குமார் ( வயது 21)என்று தெரியவந்தது அதனை தொடர்ந்து தனிப்படைப்பு சார் விசாரணை செய்து சுமாரை கைது செய்தனர் மேலும் குமார் இடமிருந்து திருடப்பட்ட நகையும் பறிப்புகள் செய்யப்பட்டது இது குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை