செய்யாறு நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மாவட்ட செயலாளர் வழங்கினார்
செய்யாறு நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் நேற்று வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் கலந்துகொண்டு புதிதாக சேர்க்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் ஏ.ஜனார்த்தனன், முன்னாள் நகர துணை செயலாளர் தணிகாசலம், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன், மாவட்ட நிர்வாகிகள் டி.பி.துரை ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், கோவிந்தராஜ், அருண், இளையராஜா, கன்னியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சி.துரை, ராமநாதன் வழக்கறிஞர்கள் முனுசாமி, மெய்யப்பன், ராஜேஷ், வளர்புரம் வரதன், பிரகாஷ், சுரேஷ்குமார், கொடநகர் வெங்கடேசன், திருச்சிற்றம்பலம், ரேணு, எழில், அபிராமி சுரேஷ், பாலாஜி, தூசி வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்கணேஷ், வெங்கடேஷ், ராஜ் , தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வாசுதேவன
கருத்துகள் இல்லை