அத்தி செவிலியர் கல்லூரியில் உலக உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி!
குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், சிறுநீரக வியல் நிபுணர் டாக்டர். பி.சௌந்தரராஜன் தலைமை தாங்கி உடல் உறுப்புகள் தானத்தின் முக்கியத்துவத்தையும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக மோகன் பவுண்டேஷன் அறங்காவலர் மற்றும் இந்திய உடல் உறுப்பு தான என்ஜிஓவுமான டாக்டர் சுனில் ஷரோப் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் ஏ. கென்னடி, அத்தி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை ,அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் கே. தங்கராஜ் மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே. குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணியில் அத்தி செவிலியர் கல்லூரி மற்றும் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தெரியும் வகையில் பதாகைகள் ஏந்தியும் மற்றும் வாய்வழியாகயும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கிரஸ் ஹவுஸ் சாலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிர்வாக அதிகாரி செந்தில்குமார் கலந்து கொண்டார். குடியாத்தம் காவல் துறை அதிகாரி ராஜேஸ்வரி , போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் முக்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேரணிக்கு பாதுகாப்பு வழங்கினர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை