காஞ்சிபுரத்தில் வாகன தணிக்கையில் ஒரு மாதத்தில் 20 லட்சம் வரை அபராதம் விதித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை* காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகள் மீறி கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், அதிக சத்தஙகள் எழுப்பும் ஒலி எழுப்பி பொருத்துதல்,வாகன உரிமம்,காப்பு உரிமை இல்லாமல் செல்லுதல், வாகனவிதிமுறைகள் மீறுதல், சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், தார் பாய் போடாமல்,தகுதி சான்று இல்லாமல் வாகனம் ஓட்டுதல்தலைக்கவசம் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், பகுதி சான்று இல்லாமல் அனுமதி சீட்டு இல்லாமல் சாலை வரி கட்டாமல் மற்றும் பதிவு செய்யப்படாதது போன்ற குற்றங்களுக்காக 16 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டது ஒவ்வொரு இடங்களிலும் தணிக்கை செய்யும் பொழுது ஓட்டுனர்களுக்கு அறிவுரை சொல்லியும் எச்சரித்தும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்துரைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது என வாகன ஆய்வாளர் கா பன்னீர்செல்வம் கூறினார்
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை