• சற்று முன்

    காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் கூறப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாநகரத்தில் தற்போது வரை ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை என துப்புரவு பணியாளர்கள் குற்றச்சாட்டு.

    ஏற்கனவே அறிவித்த அரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தற்போது வரை செவி சாய்க்காததால் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    மேலும் ஊதிய பணதை முறையாக கொடுக்காமல் காலம் தாழ்த்தி வழங்கி வருவதாகவும், இந்த மாதம் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை எழுப்பி இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    செய்தியாளர் : தினேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad