திருமாவளவன் தெளிந்திருக்கிறார் புரிந்திருக்கிறார் என மதிமுக மல்லை சத்தியா பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் பாஜக அரசு வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா செய்தியாளர்களை சந்தித்தபோது ஒரு தலித் மாநிலத்தின் முதலமைச்சராக முடியாது என திருமாவளவன் பேச்சு என்ற கேள்விக்கு அது அரசியல் அது சம்பந்தமாக அவர் தெளிந்திருக்கிறார் புரிந்திருக்கிறார் இங்கு எல்லாமே எண்ணிக்கை தான் ஒருத்தர் வெற்றி பெறுவது என்பது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை சட்டமன்றத்தின் பெரும்பான்மை எண்ணிக்கையின் அடிப்படையில் ஆனது சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் அதை அவர் கருத்தில் கொண்டு தான் அந்த செய்தியினை கூறி இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை