• சற்று முன்

    பேரணாம்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள்!

     


    பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு ஊராட்சியில் பழைய ஏக்கர் பரப்பளவில் முரம்பு மண் கடத்தப் பட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இது குறித்து சின்னதாமல் செருவு ஊராட்சியை கூடுதலாக கவனிக்கும் கிராம நிர்வாக அலுவலர்  வடிவேலுவிடம் பொதுமக்கள் பல தடவை எடுத்து சொல்லியும் ஒரு நடவடிக்கையும் இல்லை .இது குறித்து வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் புகார் அளிக்க சென்றால் அவர் இருக்கையில் இருப்பதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.  எனவே இது குறித்து பேரணாம்பட்டு ஜே. ஜே. நகரை சேர்ந்த சுதாகர் கூறுகையில்: எரிகுத்தியைச் சேர்ந்த சிட்டிபாபுவும் ,ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர்  லோகு என்கிற லோகநாதன்தான் இந்த முரம்பு மண் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும்  பேரணாம்பட்டு நகரத்துக்கு உட்பட்ட எருக்கம்பட்டு கூட்டுரோட்டில் தனி நபர் ஒருவர் சில மாதங்களாக கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பேராணம்பட்டு வருவாய் ஆய்வாளர் சரவணன் துணை போவதாகவும் கூறப்படுகிறது. எனவே இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி, குடியாத்தம் வருவாய் கேட்டாட்சியர் சுபலட்சுமி, வட்டாட்சியர் பேரணாம்பட்டு விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து தவறு என தெரியவரும் பட்சத்தில் பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் சரவணன், கூடுதல் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  பேரணாம்பட்டு பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர் : வாசுதேவன் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad