• சற்று முன்

    தொல். திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு கணியம்பாடி கிழக்கு ஒன்றியத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!


    வேலூர் மாவட்டம், கணியம்பாடி கிழக்கு ஒன்றியம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு கீழ் பள்ளிப்பட்டு கிராம இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகளும் ,விளையாட்டுப் பொருட்களும் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் வழங்கப்பட்டது. இந்த இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு பொருட்களை தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் வே. ஆனந்தன் இளைஞர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவி, மாநில துணைச் செயலாளர் சிறுத்தை சரவணன், ஒன்றிய பொருளாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு, ஒன்றிய அமைப்பாளர் மணிமாறன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கஜா, ஒன்றிய அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்டம், கணியம்பாடி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    செய்தியாளர் : வாசுதேவன் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad