ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து 3511 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து இன்று (09.08.2024) தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து 3511 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா,., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர்கள் முஹமது ஹமீன், தேவிபென்ஸ்பாண்டியன்,ஹரிணி தில்லை, ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட சமூக நலன் அலுவலர் வசந்தி ஆனந்தன் (பொறுப்பு), முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜி குமார், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பூங்குழலி மற்றும் வங்கியாளர்கள் மாணவர்கள் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை