மேலூர் விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகள் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் வைகோ
மறைந்த தொண்டர்கள் மூவரும் மதிமுகவிற்கு ஜீவநதியாக இருந்தார்கள். மூவரின் பேரும் புகழும் மதிமுக வரலாற்றில் நிலைத்திருக்கும். வை.கோ. மேலூர் விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகள் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் வைகோ.
கடந்த 5ம் தேதி அதிகாலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து மற்றும் அமல்ராஜ், புலிசேகர் ஆகிய மூன்று பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கீரைத்துரை பகுதியில் உள்ள மூன்று பேரின் வீட்டிற்கு நேரடியாக சந்தித்து அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது.தலைமை நிர்வாக குழு கூட்டம் அனைவரும் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர்கள், ஒன்றிய நகர செயலாளர், தொண்டர் படையினர் வந்தனர்.ஒவ்வொரு கூட்டத்திலும் நான் வருகிற பொழுது தவறாமல் வருகிறவர்கள் தான் பச்சமுத்து அமிர்தராஜ், புலிசேகர்,தொண்டர் படையினர் வந்தனர்.
மாவட்டச் செயலர் பூமிநாதனுடன் வருவார்கள் நான் இரண்டு மணிக்கு வந்தாலும் என்னை பார்க்க காத்திருப்பார்கள். அன்றைக்கும் அவர்களை சந்தித்தேன் முழக்கமிட்டு கொண்டிருந்தனர்.ஒரு 15 நிமிடம் கழித்து இருந்தால் வீட்டிற்கு வந்து இருப்பார்கள் இதுதான் நடந்திருக்கிறது.கட்சிக்கு எத்தனை ஆண்டுகள் சேவை செய்ய காத்திருந்தனர். மூன்று புலிகுட்டிகளை நான் இழந்து இருக்கிறேன். இந்த குடும்பங்கள் நிராதரவாக உள்ளது. அந்த குடும்பங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து உரிய முறையில் அவர்களின் பல ஆண்டுகள் சேவை செய்யக்கூடியவர்கள் அந்த உணர்வோடு அனைவருக்கும் அந்த மூன்று குடும்பத்திற்கு வேண்டிய என்ன செய்ய வேண்டிய யோசித்து அதை செய்வோம்.
அவர்கள் இந்த கட்சிக்கு ஜீவ நாடியாக இருந்தவர்கள் உயிர் சுடராக இருந்தவர்கள் தங்கள் உயிரை கொடுப்பதற்கு தயாராக இருந்தவர்கள் . கடைசி உயிரையும் கொடுத்து விட்டனர். அப்படிப்பட்ட பச்சமுத்து, அமிர்தராஜ் ,புலி சேகர் பேரும் புகழும் மறுமலர்ச்சி திமுக வரலாற்றில் என்றைக்குமே நிலைத்திருக்கும். அவர்களுக்கு மரணம் உடல் அளவில் மட்டுமே தொண்டர்கள் உள்ளத்தில் அவர்களுக்கு மரணம் கிடையாது என்னுடன் இருப்பதாகத்தான் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.
அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் பொருளாளர் செந்தில் அதிபன் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் இந்த கலந்து கொண்டனர். அனைவரையும் இங்கே வரவழைத்து மாவட்ட செயலாளர் பூமிநாதன் மிகுந்த வேதனையை தாங்கிக் கொண்டிருக்கிறோம் எனக்கு தனிப்பட்ட முறையில் இவர்களைத் தெரியும்.
இவர்களுடைய பெயரும் புகழும் இந்த கட்சியினுடைய சரித்தோடு சேர்ந்து காலமெல்லாம் வாழும் 'அந்த குடும்பங்களுக்காக என்ன கடமையாற்ற வேண்டுமோ அந்த கடமையை மறுமலர்ச்சி திமுக செய்யும். அந்த நாள் என்ன என்பதை பூமிநாதன் மற்றவர்களும் கலந்து பேசி சொல்வார்கள் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ கூறனார்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை