பெரணமல்லூர் வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு
பெரணமல்லூர் வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பெரணமல்லூர் பேரூராட்சியில் மிகவும் பழமை வாய்ந்த வரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் வடக்கு முகம் பார்த்து இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் அமாவாசை நாட்களில் நடைபெறும் ஊஞ்சல் தாலாட்டில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டால் கடன் பிரச்சனை, திருமணத்தடை நீங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு அதிகாலை மூலவர் வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், திருமஞ்சனமும் நடத்தி சிறப்பு அலங்காரமும், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 7மணிக்குமேல் உற்சவர் வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பூக்களை அலங்காரம் செய்து ஊஞ்சல் தாலாட்டு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
district reporter : vasudevan
கருத்துகள் இல்லை