காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகர் -town-வீட்டில் திடீர் சோதனை.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகர் நகரமைப்பு பிரிவு அலுவலர் வீட்டில் திடீர் சோதனை.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா.இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார்.தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்டு செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சியாமளா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு,ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்து உள்ள நிலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவில் உள்ள சியாமளா வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சியாமளா வீட்டில் சோதனை செய்து வரும் சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை