• சற்று முன்

    பேரணாம்பட்டில் மீதி சில்லரையை தராமல் பயணிகளின் பணத்தை ஏப்பம் விட்ட தனியார் பேருந்து நடத்துநர்!


    வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டுக்கு ஆம்பூர் டூ குடியாத்தம் செல்லும் TN 23BT 5999 என்ற பதிவு எண்ணை கொண்ட தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் நடத்துநராக பணியாற்றும் நபர் கடந்த மூன்று நாட்களாக பயணிகளுக்கு பயணச்சீட்டையும் கொடுக்காமல் மீதி சில்லரையையும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் இப்படியாக பகல் கொள்ளை அடித்து வருகிறார். இப்படி பயணிகளிடம் கொள்ளையடிக்கும்  பணத்தில் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலைகளையும், ஜாக்கெட்களையும் வாங்கித் தருவதாக பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. பயணிகளுக்கு சேர வேண்டிய மீதி சில்லரையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சேலைகளையும், ஜாக்கெட்களையும் வாங்கிக் கொடுத்தால் இதற்கு என்ன அர்த்தம் என்பதை நடத்துநர் உணர்வாரா?. பயணிகளை ஏமாற்றி சில்லரை தராமல் பிழைப்பு நடத்தும் நடத்துநர் இதற்கு என்ன அர்த்தம் என்பதை உணர்வாரா?. ஒரு மனைவிக்கு அவரது கணவன் தனது சொந்த சம்பளத்தில் தான் சேலைகளையும் ,ஜாக்கெட்டுகளையும் எடுத்து தர வேண்டும் என்பது நியதி. 


    ஆனால் இவரோ நேர்மாறாக மற்றவர் பணத்தை  ஏமாற்றி அந்தப் பணத்தில் தனது மனைவிக்கு சேலைகளையும், ஜாக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுத்தால் இதற்கு என்ன அர்த்தம். அத்துடன் இது நுகர்வோர் சட்டப்படி குற்றம் ஆகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளுக்கு சேர வேண்டிய மீதி சில்லரையை தராமல் அந்தப் பணத்தை ஏமாற்றி எடுத்து செல்லும் இது போன்ற நடத்துநர் மீது தனியார் பேருந்து நிர்வாகமோ வட்டார போக்குவரத்து அலுவலரோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.  நுகர்வோர் நலன் கருதி இது போன்ற அடாவடி நடத்துர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    செய்தியாளர் : வாசுதேவன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad