• சற்று முன்

    பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்!


    வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்!!

    வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்டத் தலைவர் எம்.எஸ்.செல்வகுமார் தலைமையில்  20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மாவட்டச் செயலாளர் திருஞானசம்பந்தம் வரவேற்புரையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்ட சிறப்புரை மாநில சட்டச் செயலாளர் ஜெ காந்தி, வாழ்த்துரை மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்ட 20 அம்ச கோரிக்கையுரையாற்றி இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் தனசேகர் நன்றியுரையாற்றி ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad