• சற்று முன்

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் துளசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!


    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மங்கள வாரத்தில் துளசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மங்கள வாரத்தை ஒட்டி அதிகாலையில் அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது. இதில் துளசி மற்றும் வெற்றிலையால் ஆன அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பச்சை நிறம் காண்போரது கண்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் ஆடி மாத மங்கள வாரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயரை பக்தியுடன் வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் விமரிசையாக செய்திருந்தார்.

    செய்தியாளர் : வாசு தேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad