• சற்று முன்

    கோவில்பட்டி ஜான் போஸ்கோ பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜான் போஸ்கோ பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.அவற்றுள் நேற்று ஒன்பதாம் வகுப்பு மாணவியர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக அவர்களின் உருவங்களை வண்ண வண்ண கலர் கோலப் பொடியில் ரங்கோலி படம் வரைந்து தங்களின் சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தினர்.

    இப்போட்டிக்கு பள்ளி முதல்வர் அருட் சகோதரி இருதய ஜான்சி  தலைமை வகித்தார். போட்டியின் நடுவர்களாக  அருட் சகோதரி ஜான்சி,  சுமதி , ஆகியோர் செயல்பட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ரங்கோலி படங்களை பார்வையிட்டு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசுக்கான படங்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் ஆகஸ்ட் 15 வரை பள்ளியில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து சுதந்திர தின நிகழ்ச்சி அன்று பரிசுகளை வழங்க உள்ளனர்.


    செய்தியாளர் : சிவாராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad