இந்தியன் வங்கி 118வது நிறுவன ஆண்டு விழா காஞ்சிபுரத்தில் உயரதிகாரிகள் சார்பில் பேரணி
காஞ்சிபுரம், ஆக. 9 - இந்தியன் வங்கியின் 118வது நிறுவன ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலத்தின் சார்பாக வங்கியின் சேவைகளான சேமிப்பு கணக்கு, வைப்பு தொகை, வட்டி விகிதம் என, பல்வேறு நடைமுறை திட்டங்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இப்பேரணியை சென்னை இந்தியன் வங்கி களப் பொது மேலாளர் அலுவலகத்தின் துணை பொது மேலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். துணை மண்டல மேலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கியின் அலுவலர்கள் சார்பில் நடந்த இந்த பேரணி காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் துவங்கி காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று கங்கை கொண்டான் மண்டபம் அருகில் நிறைவடைந்து.
இப்பேரணியில் உதவி பொது மேலாளர் வரதன், காஞ்சிபுரம் பிரதான கிளை முன்னோடி வங்கி மேலாளர் திலிப், முதன்மை மேலாளர்கள், மண்டல அலுவலகத்தின் முது நிலை மேலாளர்கள் என, உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தியன் வங்கி சங்கர மடம், பூக்கடை சத்திரம், சிவகாஞ்சி, திருப்புக்குழி, சின்ன காஞ்சிபுரம், ஏனாத்தூர், மீனாட்சி மருத்துவக் கல்லூரி கிளை ஆகிய வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள் மற்றும் அலுவலர்களும் பங்கேற்றனர். இந்த பேரணியில் வங்கியின் சேவைகள், வட்டி விகிதங்கள், பல்வேறு கடன் உதவிகள், மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் வாடிக்கையாளர் களுக்கான பாதுகாப்பு பெட்டகங்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொது மக்கள் மற்றும் சிறு - நடுத்தர வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை