• சற்று முன்

    காஞ்சிபுரத்தில் நூதன முறையில் கஞ்சா போதை விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்


    காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு பேரணியில் கரகாட்டம், சிலம்பாட்டம், பேண்ட் வாத்தியங்களுடன் பேரணியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்


    உலகம் முழுவதும் மனித குல சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை கடந்த இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்,

    இதனை தொடர்ந்து போதைப்பொருள் ஓழிப்பு முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளிகல்லூரி மாணவ மாணவியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கலந்து கொண்ட பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்களுடன், கரகாட்டம், சிலம்பாட்டம் என  300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இருந்து தொடங்கிய பேரணி காஞ்சிபுரம் நகரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தவாறு போதை பொருள் ஓழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.

    செய்தியாளர் :தினேஷ்




































































    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad