அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா குறித்து பேசிய தா.மோ.அன்பரசனை கண்டித்து காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ. ஆனால் திமுகவினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும். முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதல்-அமைச்சர் ஆவது எம் ஜி ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது, எம்ஜிஆரின் ஜெயலலிதாவையும் இணைந்து ஆட்சேப்பிக்க வகையில் பேசியது அதிமுக நிர்வாகிகளும் மற்றும் கட்சியின் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது,
அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காந்தி சாலையில் உள்ள தேரடி அருகே முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் அன்பரசருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் :தினேஷ்
கருத்துகள் இல்லை