• சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடனை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.



    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடனை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் வழங்கினார். 

    ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தியன் வங்கி சார்பில் நடந்த கல்விக் கடன் வழங்கும் விழாவிற்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமைத் தாங்கினார்.

    அமைச்சர் அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 18 மாணவ,  மாணவிகளுக்கு ரூபாய் 2 கோடி 15 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடனுதவியை வழங்கி அவர்பேசியதாவது: 
    'தமிழகத்தில் நிறைய மாணவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் நினைத்த உயர் படிப்புக்களை படிக்க தொடர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. 

    இந்த சிரமங்களை களைக்கும் நோக்கத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்விக் கடன் கேட்டு வரும் மாணவர்களை அலைக் கழிக்ககூடாது. மாணவர்களிடம் ஒரு சில குறைபாடுகள் - தவறுகள் இருந்தாலும் அவைகளை வங்கி நிர்வாகமே சரி செய்து மாணவர்களுகு கல்விக் கடனை தடையின்றி குறித்த நேரத்தில் வழங்க முன்வர வேண்டும்' இவ்வாறு அமைச்சர் அன்பரசன் பேசினார்.

    விழாவில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் - மேலாண்மை இயக்குனர் சிவமலர்,  காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின்  இணைப் பதிவளர் ஜெயஸ்ரீ, முன்னோடி வங்கி மேலாளர் திலீப் குமார் மற்றும் மாணவர்கள், பெற்றோர் என,  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்
    வாசுதேவன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad