• சற்று முன்

    முன்னாள் கவுன்சிலருக்கு இந்நாள் கவுன்சிலர் கொலை மிரட்டல்


     

    வேலூர் சமத் நகர் சக்தி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் குமரன். இவரது மனைவி குட்டியம்மா (48 ). இவர் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேலூர் மாவட்டம், வேலூர் டவுன் பெங்களூரு ரோட்டில் உள்ள கிருஷ்ணா திரையரங்கம் எதிரில் உள்ள காலி இடத்தினை குத்தகைக்கு எடுத்து அதில் பொருட்காட்சி நடைபெறுவதால் அந்த இடத்தின் உரிமையாளரின் அனுமதி பெற்று பார்க்கிங் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வார்டு கவுன்சிலரான க.சு. சண்முகம் பொருட்காட்சி நடைபெறும் இடத்தில்  பார்க்கிங் நடத்தி வருகிறார். இந்நிலையில் எனது வார்டில் நீங்கள் பார்க்கிங் எப்படி நடத்தலாம் என்று கூறியவாறு கடந்த 17ஆம் தேதி மாலை சுமார் 7 மணிக்கு வந்து என் வார்ட்டில் உள்ள பார்க்கிங் போக நீங்கள் எப்படி இங்கு பார்கிங் நடத்தலாம் என்றவாறு அங்கு பணியில் இருந்த கணவர் மற்றும் சில பணியாளர்களையும் கவுன்சிலர் சண்முகம் தலைமையில் 20 அடி ஆட்களுடன் உள்ளே புகுந்து அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் அந்த நபர்கள் பணியில் இருந்தவர்களை அடித்து விரட்டி அடித்துள்ளனர். 

    இது குறித்து தட்டி கேட்ட என்னை உங்களை ஒழித்து கட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து நான் பயந்து தட்டி அகேட்டது தான் நான் வைத்தது தான் எனது வேலையில் சட்டம் வென்றவாறு தகராறு செய்து அங்க பின் ரகலையில் ஈடுபட்டார் அத்துடன் உங்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் உன்னையும் உனது குடும்பத்தையும் கூண்டோடு வைத்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டினார் .நீங்கள் இங்கு தொழிலே செய்யக்கூடாது இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார் எங்களிடம் பெரிய பெரிய ரவுடிகள் உள்ளனர் என்றும் அப்போது அவர் அறிகுறிகள் எடுத்துள்ளார் அவர்களிடம் சொன்னால் போதும் உங்களையெல்லாம் போட்டுத் தள்ளிவிட்டு போய்விடுவார்கள் எனவும் மிரட்டல் விடுத்தார். உன்னையும் உன் குடும்பத்தையும் பூண்டோடு ஒழித்து விடுவோம் என்றும் அவர் கூறியதோடு நாங்கள் அரசியல் செல்வாக்கும் பணபலமும் உள்ளவர்கள். எங்களை எதிர்த்து நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதோடு எங்களை பகைத்து கொண்டு ஊரில் உயிருடன் நடமாட முடியாது எனவும் மிரட்டி உள்ளனர். இது குறித்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மேற்படி நபர்களால் மட்டுமே ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அத்துடன் நடவடிக்கை எடுக்கவும் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்கவும் அச்சம் இன்றி தொழில் செய்திடவும் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டார் . இதில் முன்னாள் கவுன்சிலர் குமரன் மற்றும் இந்நாள் கவுன்சிலர் க.சு. சண்முகம் மோதல் குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. இதில் வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. வேலூர் வடக்கு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad