சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கூட்டத்தைக் கூட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மான புத்தகத்தில் பதிவு செய்து அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை