ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து!
ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில், பாய்லர் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார். விபத்தில் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த நிறுவனத்திற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை