ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் நீலாவதி அக்காட்டமியின் சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் நீலாவதி அக்காட்டமியின் சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெகிழி பொருட்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை பொதுமக்கள் தவிர்த்து மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்துவது குறித்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர் மாணவிகளை கொண்டு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த பேரணி நிகழ்ச்சியை நீலாவதி அகாடமி நிறுவனர் ஞானவேல் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் இந்த பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்ற இருந்த மாணவர் மாணவிகள் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் மீண்டும் மஞ்சபையை பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்களாக முழக்கம் எழுப்பி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பங்கேற்றை இருந்தனர் நடைபெற்ற
விழிப்புணர்வு பேரணையானது அம்மூர் பகுதியில் தொடங்கப்பட்டு முக்கிய சாலைகளின் வழியாக சென்று வாலாஜா ரயில் நிலையம் அருகே நிறைவு பெற்றது முன்னதாக பேரணியில் பங்கேற்று இருந்த மாணவர்களின் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி மூலமாகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை