• சற்று முன்

    திமிரி பொது குளம் சீரமைக்க விடப்பட்ட ரூ.25 லட்ச டெண்டரில் முறைகேடு!

    ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு வட்டத்தைச் சேர்ந்த திமிரி சிறப்பு நிலை  பேரூராட்சியில் பழம்பெரும் பொதுக்குளம் ஒன்று உள்ளது. அந்த பொது குளத்திற்கு நீர் வரத்திற்காக ஏரியிலிருந்து கால்வாய் வெட்டவும் மற்றும் குளத்தைச் சுற்றி சாலை அமைக்கவும், குளத்தில் பழுதடைந்த பகுதிகளையும் மற்றும் குளத்தைச் சுற்றி இருக்கும்  தூண்களையும் சரி செய்ய டெண்டர் விடப்பட்டது. டெண்டரின் மதிப்பு ரூ.25 லட்சம். டெண்டர் விடப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் ஏரியிலிருந்து குளத்திற்கு நீர் வரும் கால்வாய் மட்டும் வெட்டப்பட்டது. மீதம் இருக்கும் பணிகள் எதுவும்  நிறைவு செய்யப்படவில்லை. இந்த டெண்டரை எடுத்தவர் ஆற்காட்டைச் சேர்ந்த ராஜாராம். இந்த டெண்டரை மேற்பார்வையிட்டவர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் A square  அம்சா ஆவார். இந்த டெண்டரில் விடப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள பணத்தின் நிலை என்ன ஆனது தெரியவில்லை. மேலும் மீதம் இருக்கும் பணிகளை விரைந்து நடத்தவும் ஊர் மக்கள் சார்பாக கலெக்டரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad