ஊத்துக்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் செக் அதிகாரத்தை பறிக்க தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போர்க்கொடி
ஊத்துக்காடு ஊராட்சியில் தொடரும் பிரச்சினைகள்.. ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் செக் அதிகாரத்தை பறிக்க தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போர்க்கொடி
தொடர்ந்து வளர்ச்சி பணிகளுக்கு துணைத் தலைவர் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவராக சாவித்திரி மணிகண்டன் பதவி வகித்து வருகிறார். ஊத்துக்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 8-வது வார்டு உறுப்பினர் வனஜா லட்சுமணன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கும் வனஜாவின் கணவர் லட்சுமணன் என்பவர் தொடர்ந்து ஊராட்சி விவகாரத்தில் , தலையிட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஊராட்சி வளர்ச்சி பணிகளை தடுப்பதாகவும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பிரச்சனை செய்து வருவதாகவும் , ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரியிலும் வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் ஊராட்சியில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் துணைத் தலைவர் தலையிடுவதாகவும் பிரச்சனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மாதம் இரண்டாம் தேதி அன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் , ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் செக் தவறை பறிக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஊராட்சி மன்றத்தில் முதல் கணக்கு பணியாளர் ஊதியம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிகள் ஒவ்வொன்றுக்கும் ஓடிபி சொல்வதற்கு காலதாமதம் செய்வதாகவும் , சம்பந்தப்பட்ட otp எண் கொண்ட செல்போனை அவரது கணவர் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தை துணைத்தலைவர் அவதூறுவாக பேசி வருவதாகவும், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தேர்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மற்றும் வாடு உறுப்பினர்கள் இணைந்து மனு அளித்தனர். உடனடியாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் செக் பவர் அதிகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
செய்தியாளர் : தினேஷ்
கருத்துகள் இல்லை