வேலூரில் ரோட்டரி கிளப் ஆப் வேலூர் தலைவராக வேகன் பொறுப்பேற்பு!!
வேலூர் மாவட்டம், வேலூர் ரோட்டரி கிளப் ஆப் வேலூர் வேகன் சார்பில் 2024 - 25ம் ஆண்டுக்கான தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார் புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் ரூ. 13 லட்சத்து 41 ஆயிரத்து 600 மதிப்பில் கல்வி உதவித் தொகை, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற நலத் திட்ட உதவிகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். மேலும். மாற்றுத் திறனாளிகளுக்கு நகரும் சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜார்ஜ் சுந்தர்ராஜ், சுரேஷ், சிவகுமார், சதீஷ், அமரேசன், மஞ்சுளா, தானேஷ் அருண், தரணிவாசன், பாலாஜி, பிரகாஷ்ராஜ் மற்றும் சாசன தலைவர் சியாம்முராரிலால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பத்ரிநாத் வரவேற்றார். மேலும் பிரபாகரன் உறுப்பினர்களின் தலைவராக பொறுப்பேற்று 10 புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார்.
இவ்விழா இறுதியில் நவதீப்சிங் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை