வேலூரில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக இடத்தை ஆய்வு செய்த வேலூர் எம்.பி .,கதிர் ஆனந்த்!
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிரீன் சர்க்கிளில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநிலத் தலைவருமான டி. எம். கதிர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த காட்பாடி ஒன்றிய பெருந்தலைவர் வள்ளிமலை வேல்முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் வள்ளலார் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதற்காக வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை